PUBLIC NEWS TV- அதிகாரிகளின் அலட்சியத்தால், பெரியபாளையம் மக்களுக்கு மர்ம வைரஸ் காய்ச்சல் பரவிவரும்,

PUBLIC NEWS TV- அதிகாரிகளின் அலட்சியத்தால், பெரியபாளையம் மக்களுக்கு மர்ம வைரஸ் காய்ச்சல் பரவிவரும்,

PUBLISHED:11-Oct-2017

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அதிகாரிகளின் அலட்சியத்தால், பெரியபாளையம் அருந்ததி நகர் கழிவுநீர் குட்டையாக மாறியுள்ளது. இதனால், மக்கள் மர்ம வைரஸ் காய்ச்சலால் அவதிப்பட்டுள்ளனர். இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியின் பின்புறம் அருந்ததி நகர் உள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் என நூறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இதன் அருகில் தனியாருக்குச் சொந்தமான தங்கும் விடுதிகள்,  ஆடு, மாடு, கோழி இறைச்சி கடைகள் ஆகியவை உள்ளன.

தனியார் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்கிறது. மேலும், இறைச்சி கடைகளிலில் உண்டாகும் கழிவுகளை இந்த கழிவுநீரிலேயே கொட்டுகிறார்கள். இதனால் துர்நாற்றம் வீசி அப்பகுதி மக்களுக்கு நோய்கள் பரவும் வாய்ப்புள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் தேங்காமலும், இறைச்சி கழிவுகளை கொட்டாமலும் நடவடிக்கை எடுக்கும் படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: பெரியபாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியின் பின்புறம் அருந்ததி நகரில் வசிக்கும் எங்களின் வீடுகளின் பின் பகுதியில் தனியார் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விடப்படுகிறது. இதனால், அப்பகுதி கழிவுநீர் குட்டை போல் காட்சியளிப்பதோடு, கடும் துர்நாற்றம் வீசுகிறது. 

மேலும் இறைச்சி கழிவுகளையும் இங்கேயே கொட்டுகிறார்கள். இதனால் கடந்த சில நாட்களாக எங்கள் பகுதியில் பலருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறோம். சமீப காலமாக டெங்கு காய்ச்சலுக்கு பலர் உயிரிழந்து வருகின்றனர். சுகாராத்துறை அமைச்சரோ டெங்கு காய்ச்சலுக்கு யாரும் பயப்பட வேண்டாம். அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேர சிகிச்சை அளிக்கப்படும் என கூறுகிறார். ஆனால், டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பரவுதற்கு காரணமாக உள்ள கழிவுநீர், கொசு உற்பத்தி உள்ளிட்டவைகளை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதை அகற்றினாலே, டெங்கு உள்ளிட்ட காய்ச்சலை கட்டுப்படுத்தலாம்.  

மேலும் அருகில் அரசு மேல்நிலைப்பள்ளியும் உள்ளது. பள்ளிக்கு தினமும் வரும் மாணவர்களுக்கு துர்நாற்றத்தால் கடும் அவதிப்படுகின்ரனர். மேலும், பல நாட்களாக கழிவுநீர் அங்கேயே தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளது.  எனவே, குடியிருப்பு பகுதியில் கழிவுநீரை விடும் தனியார் விடுதிகள் மீதும், இறைச்சி கழிவுகளை கொட்டும் நபர்கள் மீதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மர்ம காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.




Recommended For You