தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு அதிக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது.
மத்திய கிழக்கு வங்கக் கடலில் மேலடுக்குச் சுழற்சி நிலவி வருகிறது.
இதனால் அடுத்த இரண்டு நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அதிக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேற்கு மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.
நேற்று பதிவான மழை நிலவரம் (மி.மீட்டரில்): ஏற்காடு - 80, ஆம்பூர் - 60, திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், பரமக்குடி, மன்னார்குடி, திண்டுக்கல், மதுரை மாவட்டம் பேரையூர் - 50, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், லால்குடி, கோத்தகிரி, அவினாசி, வாழப்பாடி, பொன்னேரி, பூபதிபாண்டி - 40.