PUBLIC NEWS TV- தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு,தமிழக அரசு அறிவிப்பு..

PUBLIC NEWS TV- தமிழ் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரி குறைப்பு,தமிழக அரசு அறிவிப்பு..

PUBLISHED:13-Oct-2017

 

தமிழ்த் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 10%-லிருந்து 8% ஆக தமிழக அரசு குறைத்துள்ளது.

தமிழ் மொழிப் படங்களுக்கு 10 சதவீதமும் மற்ற மொழிப் படங்களுக்கு 20 சதவீதமும் கேளிக்கை வரி விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இது கடந்த செப். 27-ம் தேதி அமலுக்கு வந்தது. திரைப்படத் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள கேளிக்கை வரியை நீக்குவது தொடர்பாக, விஷால் உள்ளிட்ட திரைப்படத் துறையினரும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினரும் தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரிடம் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் தமிழ்த் திரைப்படங்களுக்கான கேளிக்கை வரியை 10%-லிருந்து 8% ஆக தமிழக அரசு குறைத்துள்ளது. இதையடுத்து விஷால் உள்ளிட்ட திரைத்துறையினர் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.

தமிழகத் திரையரங்குகளில் புதிய டிக்கெட் கட்டணம் அமலுக்கு வந்துள்ளது. அதன் விவரம்:

மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை

150 + (ஜிஎஸ்டி 28%) 42 + (கேளிக்கை வரி 8%) 12 + 2.16 = ரூ. 206.16 

மல்டிபிளெக்ஸ் அல்லாத ஏசி திரையரங்குகளின் டிக்கெட் கட்டணம் 

100 + (ஜிஎஸ்டி 18%) 18 + 8 + 1.44 = ரூ. 127.44 

ஏசி அல்லாத திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம்

80 + 14.40 + 6.40 + 1.15 = ரூ. 101.95

புதிய டிக்கெட் கட்டணம்

மல்டிபிளெக்ஸ் - ரூ. 206.16

ஏசி திரையரங்குகள் - ரூ. 127.44

ஏசி அல்லாத திரையரங்குகள் - ரூ. 101.95




Recommended For You