PUBLIC NEWS TV-திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.

PUBLIC NEWS TV-திமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்.

PUBLISHED:20-Oct-2017

 

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று  நடைபெற உள்ளது.

அண்ணா அறிவாலயத்தில் காலை 10 மணிக்குக் கூடும் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாது பங்கேற்க வேண்டும் என கட்சிப் பொதுச் செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.

டெங்கு ஆலோசனை: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரைச் சந்தித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வலியுறுத்தினர்.

ஆனால், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காததைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வழக்குக் குறித்த தீர்ப்பு சாதகமாக வந்தால் என்ன முடிவு எடுக்கலாம், சாதகமாக வராவிட்டால் என்ன மாதிரியான முடிவு எடுக்கலாம் என்பது தொடர்பாக கூட்டத்தில் விவாதிக்க உள்ளனர்.

திமுகவின் உள்கட்சித் தேர்தலில் சில மாவட்டங்களில் பிரச்னைகள் எழுந்துள்ளன. அந்தப் பிரச்னைகளைக் களைவது தொடர்பாக கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்த உள்ளார்.

டெங்கு பாதிப்புக் குறித்து மாவட்டச் செயலாளர்களிடம் அவரவர் மாவட்ட நிலவரங்களை ஸ்டாலின் கேட்க உள்ளார். டெங்கு பாதிப்பை போர்க்கால அடிப்படையில் போக்கக் கோரி திமுக சார்பில் தமிழகம் தழுவிய அளவில் போராட்டம் நடத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.




Recommended For You