PUBLIC NEWS TV- 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று தீர்ப்பு தேதி அறிவிப்பு.

PUBLIC NEWS TV- 2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் இன்று தீர்ப்பு தேதி அறிவிப்பு.

PUBLISHED:25-Oct-2017

2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2004-2009 மற்றும் 2009 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி  ஆட்சியில் இருந்தது. அப்போது 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடத்தியது. அதில் மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சராக ஆ. ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட 14 பேர் மீதும் மூன்று தனியார் நிறுவனங்கள் மீதும் சிபிஐ 2011-ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்தது.

 இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆறு ஆண்டுகளாக தில்லி சிபிஐ நீதிமன்ற சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனி முன்னிலையில் நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து வழக்கின் வாதங்கள் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இந்நிலையில் நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிக்க உள்ளது.




Recommended For You