PUBLIC NEWS TV -ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடத்த இன்று தேதி அறிவிப்பு.

PUBLIC NEWS TV -ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் நடத்த இன்று தேதி அறிவிப்பு.

PUBLISHED:25-Oct-2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதா மறைவு காரணமாக, சென்னை, ஆர்.கே.நகர் தொகுதி காலியானது. காலியான தொகுதிக்கு, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்ட்டது.

அதிமுகவின் இரு அணிகள், திமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிவித்தன. அதிமுக சசிகலா அணியில் டிடிவி தினகரனும், ஓபிஎஸ் அணியில் மதுசூதனனும் போட்டியிட்டனர்.
ஆனால் ஆர் கே நகர் தொகுதியில் ஓட்டுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதைத்தொடர்ந்து அமைச்சர் சி.விஜயபாஸ்கர்  வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் பணம் கொடுத்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தலுடன் சேர்த்து ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கான தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் டிசம்பர் மாதத்துக்குள் தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.




Recommended For You