PublicNewsTv-பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதியில் 26 கடைகளுக்கு 'சீல்' வைத்து மாநகராட்சி...!

PublicNewsTv-பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதியில் 26 கடைகளுக்கு 'சீல்' வைத்து மாநகராட்சி...!

PUBLISHED:26-Oct-2017

பெரம்பூர் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதியில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட 26 கடைகளுக்கு அதிகாரிகள் சீல்


சென்னை மாநகராட்சி,தண்டையார்பேட்டை, உள்ள  4வது மண்டலம் 35, 36 மற்றும் 46வது  வார்டுகளில் பல்வேறு தொழிற்சாலைகள் தொழில் உரிமம் இல்லாமல் இயங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, தொழிற்சாலைகளின் மீது நடவடிக்கை எடுக்கும்படி மண்டலம் 4ன் உதவி ஆணையர்  உத்தரவின்பேரில்,  மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர் , உரிம ஆய்வாளர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி, வியாசர்பாடி சர்மா நகரில் சந்திரசேகரின் டைல்ஸ் கடை, யுவராஜின் குளிர்பான கடை, செல்வக்குமாரின் மரக்கடைசல் கடை, ஜெயவேலின் மரக்கடை, காதர் மைதீனின் சன்மைக்கா கடை, பன்னீர்செல்வத்தின் மரப்பொருள் விற்பனையகம், பஞ்சவர்ணத்தின் மரக்கடை, முகமது மொய்தீனின் இரும்புக் கடை, நாராயணசாமியின் துணிக்கடை ஆகிய கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதுபோல், கொடுங்கையூரில் நிஜாம் மற்றும் ரசிகா லாலின் பிளாஸ்டிக் கடை, கிஷன்லாலின் அட்டை பெட்டி தயாரிக்கும் கம்பெனி, கலிமுல்லாவுக்கு சொந்தமான டிபன் கடை, ராஜேஷின் ஹார்டுவேர்ஸ் கடை, ஜிஎன்டி சாலையில் பவன் என்பவரின் இருசக்கர வாகன ஷோரூம், அப்துல் என்பவரின் செருப்பு கடை உள்பட உரிமம் இல்லாமல் இயங்கிய 26 கடைகளும் பூட்டி சீல் வைக்கப்பட்டன.




Recommended For You