PUBLIC NEWS TV-வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

PUBLIC NEWS TV-வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் மூன்று மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு.

PUBLISHED:30-Oct-2017

 சென்னை:-

இன்று துவங்கியுள்ள வட கிழக்கு பருவ மழையின் காரணமாக, விட்டு விட்டு  மழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம்  மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே மையம் கொண்டு இருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் மையம் கொண்டு இருப்பதால் சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அதே சமயம் இன்று துவங்கி 5 நாட்களுக்கு வரும்  3ம் தேதி  வரை மழை தீவிரம் அடையும் என்றும் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், புதுவையிலும், மிக பலத்த மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. 

தமிழகத்தில் இன்று அதிகாலை முதல் பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருவதால் நகரின் அநேக இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளம்போல் காட்சி அளிக்கிறது. ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

இந்நிலையில், கனமழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வகுப்புகளை முடித்து மாணவ, மாணவிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என உத்தரவைடப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக சென்னை, காஞ்சி மற்றும் திருவள்ளூர் மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




Recommended For You