PublicNewsTv-மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு, அதிர்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள்!?.

PublicNewsTv-மின்சாரம் தாக்கி இரண்டு சிறுமிகள் உயிரிழப்பு, அதிர்ச்சியில் அப்பகுதி பொதுமக்கள்!?.

PUBLISHED:01-Nov-2017

சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக வட சென்னையின் பல பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில், கொடுங்கையூரில் உள்ள ஆர்.ஆர். நகர் பகுதியில் மழை நீரில் மின்சார கம்பி அறுந்து கிடந்ததை அறியாத இரு   அந்த கம்பியை தெரியாமல் மிதித்தனர். 
மின்சாரம் தாக்கிய அதிர்ச்சியில் அவர்கள் இருவரும் தூக்கி எறியப்பட்டனர். இதை கவனித்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிகளை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி யுவஸ்ரீ வயது9 மற்றும் பாவனா வயது8 என்ற இரு சிறுமிகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். 

மின்சார கம்பி அறுந்து விழுந்து கிடப்பது தொடர்பாக அப்பகுதியில் உள்ள மின்வாரிய அதிகாரிகளுக்கு புகாரளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் இந்த சோகச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக  அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில்,
மின்சாரம் தாக்கிய பலியான சிறுமிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று மின் துறை அமைச்சர் தங்கமனி அறிவித்துள்ளார். இச்சம்வவம் குறித்து விசாரணையின் முடிவில், வியாசர்பாடி மின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப்பொறியாளர் உள்ளிட்ட 8 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.




Recommended For You