PUBLIC NEWS TV- சென்னையில் விடியவிடிய மழை கொட்டி தீர்த்தது.

PUBLIC NEWS TV- சென்னையில் விடியவிடிய மழை கொட்டி தீர்த்தது.

PUBLISHED:03-Nov-2017

 சென்னையில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை. அனைத்து  பகுதிகளையும் வெள்ள நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து மிகவும் பாதித்துள்ளத.

வங்க கடலின் மத்திய மேற்கு பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டது காரணமாக கடந்த 29ம் தேதி முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் தொடர்மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை துவங்கிய மழை விடாமல் நள்ளிரவு தாண்டியும் தொடர்ந்து பெய்தது. விடிய விடிய கனமழை பெய்தததால் சென்னை முழுவதும் போக்குவரத்து அடியோடு முடங்கியது. வாகனங்கள் செல்ல முடியாதபடி பல பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது.

சென்னையின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெளியேற முடியாததால் மயிலாப்பூர், மந்தைவெளி, தரமணி, பெரம்பூர், ஓட்டேரி, வேளச்சேரி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதனால் நகரின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கின.

தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறும்படி தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் அறிவுறுத்தியது. பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்களும் அறிவிக்கப்பட்டன.




Recommended For You