PublicNewsTv-காவலர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமை சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.

PublicNewsTv-காவலர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமை சென்னை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.

PUBLISHED:10-Nov-2017

காவலர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாமை சென்னை காவல் ஆணையர்  தொடங்கி வைத்தார்.

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் காவலர்களுக்கா மருத்துவப் பரிசோதனை முகாம் நேற்று 2-வது தளத்தில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில் “காவலர்கள்  பணியை மட்டும் அல்ல உடலையும் சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். கட்டுக்கோப்பாக உடலை பேணிப் பாதுகாக்க வேண்டும்” என்று காவலர்களுக்கு  அறிவுரை வழங்கினார்.

சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் காவலர்களுக்கு  மருத்துவப் பரிசோதனை நடத்தினர். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்டவை தொடர்பாக காவலர்களுக்கு சோதனை நடத்தப்பட்டு மருத்துவ முடிவும் உடனடியாக வழங்கப்பட்டது.

உடலில் நோய் அறிகுறிகள் இருப்பின் அதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டி, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கினர். இதில், காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் காவலர்கள், பணியாளர்கள் உள்பட பல  பேர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் எச்.எம்.ஜெயராம், எம்.சி.சாரங்கன், எஸ்.என்.சேஷசாயி, கே.பெரியய்யா, எம்.டி.கணேசமூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.




Recommended For You