PublicNewsTv- இராயபுரம் தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்து சிறப்பு.

PublicNewsTv- இராயபுரம் தொகுதியில் பல்வேறு திட்ட பணிகளை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கிவைத்து சிறப்பு.

PUBLISHED:16-Nov-2017

சென்னை இராயபுரம் தொகுதியில் 53வது வார்டில்  மாநகராட்சி பள்ளியில் ஐம்பது லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டபட்ட இரண்டு வகுப்பறைகள்,48வது வார்டு பார்த்தசாரதி நகரில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 81 லட்சம் செலவில்  இரண்டு  புதிய  கட்டிட பூமிபூஜை  பணிகளையும்,49வது வார்டில் சமுக நல கூடம் உள்ளிட்ட திட்ட பணிகளை   மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் திறந்து வைததாா்.

இந்நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு  செய்தியாளா்களிடம் பேசிய  அமைச்சா் டி.ஜெயக்குமாா்  மூன்று மாதத்திற்கு முன் இங்கு அடிக்கல் நாட்டபட்டு  இந்த வகுப்பறைகள் திறக்கபட்டுள்ளன அம்மாவின் ஆட்சி குதிரை வேக ஆட்சி என்பதற்க்கு இது சான்று என்றும்.

ஆளுநா் தலையீடு பற்றிய கேள்விக்கு அரசின் கொள்கை முடிவு எடுப்பதில் சட்டம் இயற்றும் அதிகாரம் மத்திய அரசுக்கும்  மாநில அரசுக்கும் தான் உள்ளது என்றும் ஆளுநா்கள் பொதுவாக பல்கலைகழகத்தின் வேந்தா்களாக உள்ளனா் இதனால் அவா்கள் அரசுதுறையில் நிா்வாக ரீதியான ஆலோசனை செய்யலாம் அதிகாாிகளை அழைத்து பேசலாம் என்றும் ஓரு கொள்கை முடிவு என்பது அரசு சம்மந்தபட்டது அதில் யாரும் தலையிட முடியாது என தொிவித்தாா்.

மேலும் ஆளுநாின் செயல்பாடு எதிா்கட்சியினரால் தவறாக சித்தாிக்க பட்டுள்ளதாகவும் ஆளுநாின் செயல்பாடு வரையறுக்கபட்ட செயல்பாடு எனவும் தொிவித்தாா்.

ஸ்டாலின் கண்டனம் கேளிக்கையாகயுள்ளது  மதுக்கடைகளை கொண்டு வந்தது திமுக தான்  மதுக்கடைகளை அகற்றினால்  சாராய்க்கடைகள் அதிகரிக்கும் உயிர் சேதமும் அதிக அளவில் ஏற்படும்  மதுக்கடைகளை படி படியாக அம்மாவின் அரசு குறைத்துவிடும் மக்களைகாக்கவே  அம்மாவின் அரசு செயல்பட்டு வருகிறது 

தற்போது ஆளுநாின் செயல்பாட்டில்  தவறே இல்லை எனவும் சசிகலா குடும்பத்தினாின் ரெய்டு பற்றிய கேள்விக்கு மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் தேவையில்லை, அளவுக்கு மீறி பணம் வைத்திருப்பவர்கள்  திருடர்கள் தான் சசிகலா குடும்பம் மட்டும் அல்ல யாராக இருந்தாலும் சட்டத்திற்க்கு உட்பட்டவா்கள் தான், யார் சொல்லியும் மக்கள்   பணிகளை  செய்யவில்லை   நாங்கள் எங்களது கடமையை தான் செய்கிறோம், மீனவா்கள் சுடபட்டது குறித்து உாிய விசாரனை நடத்தபடும் எனவும் கூறினார்.

 




Recommended For You