PublicNewsTv-சென்னையில் காய்கறி, முட்டை, பழங்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு.

PublicNewsTv-சென்னையில் காய்கறி, முட்டை, பழங்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு.

PUBLISHED:17-Nov-2017

சென்னையில் காய்கறி, முட்டை, பழங்கள் விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து வருகிறது.

தென் மாவட்ட மக்கள் அதிகம் பயன்படுத்தக் கூடிய சின்ன வெங்காயம் 1 கிலோ ரூ.180-ஆக விலை உயர்ந்துள்ளது.தாராபுரம், பொள்ளாச்சி, உடுமலைபேட்டை, வத்தலக்குண்டு, ஒட்டன்சத்திரம், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகளில் சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்ததால் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.இதனால் கடந்த 4 நாட் களாக ரூ.180-க்கு உயர்ந்த சின்ன வெங்காயத்தின் விலை இன்னும் குறைய வில்லை.

நாசிக் மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து பெரிய வெங்காயம் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. இதன் விலையும் 1 கிலோ ரூ.55-க்கு உயர்ந்துள்ளது. ஆந்திராவில் இருந்து பெரிய வெங்காயத்தின் 2-ம் ரகமாக பொடி வெங்காயம் வருகிறது. வீதிகளில் விற்கப்படும் இதன் விலையும். ரூ.40-ஆக உயர்ந்துள்ளது.

கத்தரிக்காய், தக்காளி, புடலங்காய் உள்பட அனைத்து காய்கறிகள் விலையும் மளமளவென உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காய்கறிகளின் விலை விவரம் கிலோவுக்கு வருமாறு:-

கத்தரிக்காய்-ரூ.60, தக்காளி-ரூ.55, வெண்டைக்காய்-ரூ.80, கேரட்- ரூ.100, பீன்ஸ்-ரூ.70, அவரைக்காய்-ரூ.70, புடலங்காய்-ரூ.60, சவ்சவ்-ரூ.40, முள்ளங்கி-ரூ.40, காளிபிளவர்-ரூ.40, உருளைகிழங்கு-ரூ.40, கீரை 1 கட்டு-ரூ.20, மல்லி, புதினா1கட்டு-ரூ.8.

காய்கறி விலை அதிகரித்ததை தொடர்ந்து பலர் முட்டை வாங்க தொடங்கினார்கள். இதனால் இப்போது முட்டை விலையும் உயர்ந்து விட்டது.

முட்டை விலை நேற்று ஒரே நாளில் 42 காசு அதிகரித்ததை தொடர்ந்து மொத்த விற்பனையில் 5 ரூபாய் 90 காசுக்கு கடைகளுக்கு முட்டை வழங்கப்படுகிறது. இதனால் சில்லறை விலையில் 1 முட்டை 6 ரூபாய் முதல் ரூ.6.50 வரை விற்கிறார்கள்.

முட்டை, வெங்காயம் விலை உயர்ந்ததை தொடர்ந்து ஓட்டல்களில் ஆம்லெட் விலையும் உயர்ந்துள்ளது. 10 ரூபாய்க்கு கிடைத்த ஆம்லெட் இப்போது ரூ.12 முதல் ரூ.15 வரை விலை உயர்ந்து விட்டது.

பழ வகைகளில் பூவன், மோரீஸ், கிலோ ரூ.40-க்கும், ஏலக்கி, கற்பூரவள்ளி, நேந்திரம், செவ்வாழை ரூ.80-க்கும் மலைவாழை ரூ.100-க்கும் விற்கப்படுகிறது.

ஆப்பிள் ரூ.180, கமலா ஆரஞ்சு, சாத்துக்குடி ரூ.80, கொய்யாப் பழம் ரூ.60, பப்பாளி ரூ.30, மாதுளம் பழம் (வெள்ளை) ரூ.80, சிவப்பு ரூ.150, திராட்சை ரூ.100, கறுப்பு திராட்சை ரூ.150-க்கு விற்கப்படுகிறது.




Recommended For You