PUBLIC NEWS TV- மக்களுக்கு தொண்டு செய்தால் மட்டுமே நடிகர்கள் அரசியலில் வெற்றிபெற முடியும் விவேக்!? .

PUBLIC NEWS TV- மக்களுக்கு தொண்டு செய்தால் மட்டுமே நடிகர்கள் அரசியலில் வெற்றிபெற முடியும் விவேக்!? .

PUBLISHED:19-Nov-2017

 

திரைப்பட நடிகர்கள் யாராக இருந்தாலும் மக்களுக்கு தொண்டு செய்திருந்தால் மட்டுமே அரசியலில் வெற்றிபெற முடியும் என்று நடிகர் விவேக் கூறினார்.

விவேக் தன் 56-வது பிறந்த நாளை இன்று தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளியில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியை நடத்தினார். அதில் மரக்கன்றுகளை நட்டதோடு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் விவேக் கூறுகையில், ''எம்.ஜி.ஆர் நடிகராக இருக்கும்போதே மக்கள் பணி செய்ததாலும், திரைப்படங்களில் நீதி போதனைகளை வழங்கியதாலும்தான் அரசியலில் மிகப்பெரிய வெற்றியைக் காண முடிந்தது. அரசியலில் வெற்றி பெற அனைத்து திரைப்பட நடிகர்களும் ஏதாவது ஒரு விதத்தில் மக்களுக்கு நற்பணி ஆற்றியிருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் மக்கள் அரசியலில் வெற்றிபெற வைக்க யோசிப்பார்கள். மக்களுக்குள் இறங்கி அவர்களுக்காக சேவை செய்யும் நடிகர்களே வெற்றிபெற முடியும்'' என்றார்.




Recommended For You