மூளைச்சாவடைந்த சிறுவனின் உடலுறுப்பு தானம்

மூளைச்சாவடைந்த சிறுவனின் உடலுறுப்பு தானம்

PUBLISHED:29-Aug-2017
சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் இன்று விபத்தினால் மூளைச்சாவடைந்த தனுஷ்கோடி (18) என்பவரின் உடல்உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. சென்னை கண்டிகை பகுதியைச்சேர்ந்த தனுஷ்கோடி (வயது 19) என்பவர் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஏற்பட்ட விபத்தினால் கடந்த 25ஆம் தேதி பொன்னேரியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு ஐ.சி.யு வில் இருந்து வந்த நிலையில், இன்று காலை மூளைசாவடைந்தார்.உடனே மருத்துவர்கள் அவரின் குடும்பத்தாருடன் உடல் உறுப்பு தானம் பற்றி கலந்தாலோசித்து அவரின் இதயம், நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், கண்கள் ஆகியவற்றை தானமாகப்பெற்றார்கள்.இதயம், நுரையீரல் ஆகியவை தனியார் மருத்துவமனைக்கும், ஒரு சீறுநீரகம், கல்லீரல் ஸ்டான்லி மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம் ஜி.எச். மருத்துவமனைக்கும் கண்கள் எழும்பூர் மருத்துவமனைக்கும், தானமாக வழங்ப்பட்டது.மேலும் இதயம் கனநேரத்தில் போக்குவரத்து காவலர்கள் உதவியுடன் வேகமாக கொண்டு செல்லப்பட்டு, நோயாளிக்கு பொருத்தப்பட்டது. செந்தில் (உடல் உறுப்பு தான ஒருங்கிணைப்பாளர்)


Recommended For You