PUBLIC NEWS TV-ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் டிசம்பருக்குள் நடத்த, உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

PUBLIC NEWS TV-ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் டிசம்பருக்குள் நடத்த, உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

PUBLISHED:22-Nov-2017

சென்னை:-

ஆர்.கே நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தேதியை முடிவு செய்ய லக்கானி டில்லி செல்ல உள்ளார்.


முதல்வர் ஜெயலலிதா மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி காலியானது. இந்த தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு,

அ.தி.மு.க., தி.மு.க., சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். தேர்தல் பிரசாரத்தின் போது எழுந்த பணம் பட்டுவாடா புகாரால், தேர்தல் ரத்தானது. இதையடுத்து, ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்பதால், அதன்படி, தேர்தல் நடத்த கோரி, உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய அமர்வு,'வரும் டிசம்பருக்குள் தேர்தல் நடத்தப்படும்' என, எதிர்பார்ப்பதாக தெரிவித்திருந்தது. போலி வாக்காளர்களை நீக்க கோரிய திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று  ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை, டிசம்பருக்குள் நடத்தும்படி, தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் ஆர்கே நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தேதியை முடிவு செய்ய இரண்டு நாளில் தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி டில்லி செல்ல உள்ளார். அப்போது தலைமை தேர்தல் ஆணையருடன் நடக்கும் ஆலோசனைக்கு பிறகு, விரைவில் தேர்தல் நடக்கும் தேதி அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ளும் இயந்திரம் தேர்தலின் போது பயன்படுத்தப்பட உள்ளது.




Recommended For You