PUBLIC NEWS TV- அரசு பொது மருத்துவமனை லிப்ட்டில் பொதுமக்கள் சிக்கியதால் பரபரப்பு.

PUBLIC NEWS TV- அரசு பொது மருத்துவமனை லிப்ட்டில் பொதுமக்கள் சிக்கியதால் பரபரப்பு.

PUBLISHED:25-Nov-2017

சென்னை;-

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனயில் தினசரி 12 ஆயிரம் புறநோயாளியாக  சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆயிரக்கணக்கானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனை வளாகத்தில் டவர் பிளாக் 1, டவர் பிளாக் 2 ஆகியவையே பிரதான கட்டிடங்கள். 6 தளங்களை கொண்ட மிகப்பெரிய கட்டிடம் என்பதால் 5 லிப்ட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், டவர் 1 கட்டிடத்தின் முன்புறத்தில் உள்ள லிப்ட்டில் தரைத்தளத்தில் நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் ஏறினர். 

மூன்றாவது தளத்திற்கு சென்று கொண்டிருந்த நிலையில் லிப்ட் 2வது தளத்துக்கும் 3வது தளத்துக்கும் இடையில் பழுதாகி நின்றுவிட்டது. இதனால் நோயாளிகள் செய்வதறியாது திகைத்தனர். இதுகுறித்து தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வாகனம்  மருத்துவமனை வளாகத்துக்கு வந்தது. லிப்ட் செயல்பாட்டை நிறுத்தி அதில் சிக்கியவர்களை மீட்க தொடங்கினர். 

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் யாரும் லிப்ட்டில் சிக்காததால் பெரும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. லிப்ட் திடீரென நின்றதால் பயத்தில் 3 பேர் மயங்கினர். ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்புப் படையினர் அனைவரையும் மீட்டனர்.  மயக்க நிலையில் இருந்த 3 பேருக்கும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. 




Recommended For You