PublicNewsTv- மாமூல் வசூலிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

PublicNewsTv- மாமூல் வசூலிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

PUBLISHED:28-Nov-2017

 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

கடலூர் மாவட்டம் திருமுட்டம் ஒன்றியம் சாத்தாவட்டம் கிராமத்தில் மணல் கடத்தல், பாலியல் தொல்லை உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை தட்டிக்கேட்டவர்களை பழிவாங்கும் வகையில் அப்பாவி இளைஞரை விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் உயிருடன் எரித்துக் கொன்றுள்ளனர். இதன் பின்னணியில் உள்ளவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

ஆனந்தனை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்துக் கொன்றதை சாதாரணமான நிகழ்வாகக் கருதி ஒதுக்கிவிட முடியாது. சாத்தாவட்டம் கிராமத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும், தாழ்த்தப்பட்ட மக்களும் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் பல சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சாத்தாவட்டத்தையடுத்த கூடலையாற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளிச் செல்லும் சரக்குந்து ஓட்டுனர்களை மிரட்டி, ஒரு சரக்குந்துக்கு ரூ.200 வீதம் மாமூல் வசூலிப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாடிக்கையாகக் கொண்டிருக்கின்றனர்.

லட்சக்கணக்கில் வசூலாகும் மாமூல் பணத்தில் ஒரு பகுதியை காவல்துறையினருக்குக் கொடுத்து விட்டு, மீதமுள்ளதை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உள்ளூர் நிர்வாகிகள் முதல் மாவட்ட நிர்வாகிகள் வரை பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.

காவல்துறை ஆதரவுடன் மணல் சரக்குந்து ஓட்டுனர்களிடம் மாமூல் வசூலிப்பதற்கும் ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்து வந்ததால் அவர்களும் தங்கள் பகையை தீர்த்துக் கொள்ள ஆனந்தனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன் சிறையிலிருந்து பிணையிலிருந்து வந்த நிலையில் தான் ஆனந்தன் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளால் கொடூரமான முறையில் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்.

ஆனந்தன் தான் அவரது குடும்பத்தின் நம்பிக்கையாக இருந்திருக்கிறார். பெற்றோரைக் காப்பாற்றவும், தங்கையின் திருமணத்திற்காகவும் அவர் வெளிநாடு செல்லவிருந்த நிலையில் தான் அவர் கொல்லப்பட்டிருக்கிறார்.

அவரைக் கொலை செய்த குற்றவாளிகள் மட்டுமின்றி பின்னணியில் இருந்து இயக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும் காவல்துறை கைது செய்து தண்டனை பெற்றுத்தர வேண்டும். ஆனந்தன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இரு நாட்களில் இதைச் செய்யத் தவறினால் மிகப்பெரிய போராட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும். இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.




Recommended For You