போக்குவரத்து அமைச்சர் அவர்களுக்கு பொதுமக்களின் கேள்விகள்.

போக்குவரத்து அமைச்சர் அவர்களுக்கு பொதுமக்களின் கேள்விகள்.

PUBLISHED:31-Aug-2017
மாண்புமிகு போக்குவரத்து அமைச்சர் அவர்களுக்கு பொதுமக்களின் கேள்விகள். 1,செப்டம்பர் 1 முதல் வாகன ஒட்டிகள் ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்ற சட்டத்திற்கான காரணம் என்ன? 2. உதாரணமாக ஒரிஜினல் லைசென்ஸ் தவறி விட்டால் நான் வேறு ஊரில் வேலை செய்யும்பட்சத்தில் அந்த ஊரிலேயே மீண்டும் பெறுவதற்கான வசதிகளை செய்துள்ளீர்களா? 3, ஏற்கனவே வாகன தணிக்கை என்ற பெயரில் பலவித முறைகேடுகள் நடந்துவரும் நிலையில் முறைகேடு செய்பவர்களை மேலும் ஊக்குவிப்பது போல ஆகிவிடாதா? 4, மக்களுக்கு இந்த சட்டத்தினால் என்ன பயன் என்பதை தெளிவாக கூறுவீர்களா? 5,கிட்டத்தட்ட 99% மக்கள் லைசென்ஸ் வாங்கியிருப்பது போக்குவரத்து அலுவலகத்தில் தானா என்று சந்தேகம் எழுந்துள்ளதே? 6,அப்படி ஒரிஜினல் தான் வைக்க வேண்டுமானால்(உதாரணமாக பிறப்புச்சான்றிதல் பொதுமக்களின் விருப்பத்திற்கேற்ப அதிக எண்ணிக்கையில் கிடைக்கும்)அதிகப்படியான எண்ணிக்கையில் ஒரிஜினல் கிடைக்க நடவடிக்கை எடுத்துள்ளீர்களா? 7, லைசென்ஸ் தவறும் பட்சத்தில் உடனடியாக மாற்று லைசென்ஸ் கிடைக்குமா? 8, எத்தனையோ பொருளாதார சிக்கலில் தவிக்கும் சாமான்யனுக்கு இந்த சட்டத்தினால் என்ன பயன்? 8, விபத்துக்கள் வாகன ஓட்டிகளால் மட்டுமே ஏற்படுகிறதா? 9, வாகன தணிக்கை என்ற பெயரில் வாகன ஓட்டி மட்டுமே தணிக்கை செய்யப்படுகிறார்.அவரால் இயக்கப்படும் வாகனத்தை ஏன் தனிக்கை செய்வதில்லை 10, ஓழுங்கற்ற சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு யார் பொறுப்பு. சட்டங்கள் மக்களை காப்பற்ற வேண்டுமே தவிர தவிக்கவிட கூடாது.


Recommended For You