தமிழகம் முழுவதும் வரும் 6ம் தேதி முதல் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படு

தமிழகம் முழுவதும் வரும் 6ம் தேதி முதல் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படு

PUBLISHED:04-Sep-2017

 

தமிழகம் முழுவதும் வரும் 6ம் தேதி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

 

சென்னை-

 வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த பிறந்த 6 வாரம் முதல் 14 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து வரும் 6ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளது.இந்தியாவில் ஒரு ஆண்டில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளிடையே ஏற்படும் மிதமான மற்றும் கடுமையான வயிற்று போக்குகளில் 40 சதவீதம் ரோட்டா வைரஸ் கிருமி தொற்றினால் ஏற்படுகிறது. அதாவது 78 ஆயிரம் குழந்தைகள் இந்நோயினால் இறக்கின்றனர்.வயிற்றுப்போக்கை முழுமையாக கட்டுப்படுத்தும் நோக்கில் உள்ள சுகாதார நிறுவனம் அனைத்து நாடுகளிலும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து அளிக்கப்பட வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. தற்போது 81 நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

 

அதன்படி இந்தியாவில் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து படிப்படியாக கொடுக்கப்பட உள்ளது. தமிழகத்திலும் தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் இந்த ரோட்டா வைரஸ் சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரும் 6ம் தேதி தமிழகம் முழுவதும் இந்த ரோட்டோ வைரஸ் தடுப்பு மருந்து வினியோகம் செய்யும் பணி தொடங்கப்படுகிறது.

 

சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைக்கிறார். அதாவது, பிறந்த ஒன்றரை மாத குழந்தை முதல் மூன்றரை மாத குழந்தைகள் வரை இந்த சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 3 தவணைகள் முறையே 6, 10, 14 வாரங்களில் ஏனைய தடுப்பு மருந்துகளோடு வாய்வழியே 5 சொட்டு மருந்துகள் வழங்கப்படும்.ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து மிகவும் பாதுகாப்பானது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரில் மருத்துவமனை, கிராமப்புற சுகாதார நிலையங்களில் இலவசமாக ரோட்டா வைரஸ் தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.




Recommended For You