PublicNewsTv- விபத்துக்களை தடுக்கவே அசல் ஓட்டுநர் உரிமம் தமிழக அரசு விளக்கம்.

PublicNewsTv- விபத்துக்களை தடுக்கவே அசல் ஓட்டுநர் உரிமம் தமிழக அரசு விளக்கம்.

PUBLISHED:08-Sep-2017

 

சென்னை: 

தமிழக அரசு யேற்றியுள்ள  வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அரசு  இன்று பதில் மனு தாக்கல் செய்துள்ளது.மோட்டார் வாகன சட்டத்தில் அசல் ஓட்டுநர் உரிமம் பற்றிய விதி எதுவும் இல்லை என்று மனுதாரர் கூறியிருந்த நிலையில், தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது.அந்த  மனுவில், மோட்டார் வாகன சட்டப்படி ஏற்கனவே இருக்கும் விதிகளின் அடிப்படையில்தான், அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.மேலும் விபத்துகளை குறைப்பதற்காகத்தான் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வலியுறுத்துகிறோம். 2011 முதல் 2017 ஜூலை மாதம் வரை 32 ஆயிரம் விபத்துகள் ஏற்பட்டு 9,881  ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலேயே அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. எனவே இதனைத் தவிர்க்கவே, அசல் ஓட்டுநர் உரிமம் கேட்கப்படுகிறது என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.




Recommended For You