PublicNewsTv-முதல்வர் அறிவித்தபடி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும்.

PublicNewsTv-முதல்வர் அறிவித்தபடி அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும்.

PUBLISHED:09-Sep-2017

 

சென்னை: 

முதல்வர் அறிவித்தபடி வரும் 12-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறுகையில், சட்டப்பேரவையில் எங்களின்  பெரும்பான்மையை நிரூபிப்போம். அறிவித்தபடி  வரும் 12-ல் பொதுக் குழு, செயற்குழு கூட்டம் நடைபெறும். இதில் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்றார்.  மேலும், தமிழகத்தை சூரையாடியவர்கள் எங்களை தரங்கெட்ட முறையில் விமர்சிக்கிறார்கள். என் கேள்விக்கு பதிலளிக்க துணிவில்லாதவர்கள் என்னை கீழ்தரமாக விமர்சிக்கிறார்கள் என்று கூறினார்.    டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்எல்ஏ ஜக்ககையன் போல  பல எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.




Recommended For You