மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் சர்வதேச தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு சர்வதேச தமிழ் பல்கலை கழக துணைவேந்தர் டாக்டர் பாண்டியராஜன் தலைமை வகித்தார்.
இதில், தமிழ்தொண்டு மற்றும் சமூக தொண்டு ஆற்றிவரும் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சுபாஷினி என்பவரை பாராட்டி சேவா ரத்னா விருது வழங்கி கெளரவிக்கபட்டது.
மேலும் பல்வேறு சேவையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.