தண்டையார்பேட்டை 4வது மண்டலத்தில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்.

PUBLISHED:13-Dec-2024

பெருநகர சென்னை மாநகராட்சி தண்டையார்பேட்டை 4வது மண்டல அலுவலகத்தில் மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன் தலைமை தலைமையில் மண்டல அதிகாரி சரவணன் மூர்த்தி  முன்னிலையில் மாதாந்திர மாமன்ற உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் திமுக , கம்யூனிஸ்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் வார்டில் ஏற்பட்டுள்ள  உள்ள பிரச்சனைகளை  எடுத்து கூறினர். அப்போது மண்டல குழு தலைவர் நேதாஜி யு.கணேசன் அதிகாரிகளிடம் மாமன்ற உறுப்பினர்கள் கூறிய  பிரச்சினைகளை சரி செய்து தரும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் இக்கூட்டத்தில் 12 கோடி ரூபாய் மதிப்புள்ள 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கிய தீர்மானமாக எப்போதும் மழை பெய்தால் தண்டையார்பேட்டை இளைய முதலி தெருவில் மழைநீர் தேங்கி நிற்கும் அதனை சரி செய்வதற்காக ஒரு கோடியை 47 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தண்டையார்பேட்டை கருணாநிதி நகர் 3வது தெருவில் 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவது வியாசர்பாடி 45வது வார்டுக்குட்பட்ட பகுதியில் தெருக்களில் பெயர் பலகை அமைத்தல் பணிக்கு 40 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கைலாசம் தெருவில் உள்ள மாநகராட்சி பள்ளியின் மேற்கூரை அமைப்பதற்கு பத்து லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. எண்ணூர் தண்டையார்பேட்டை எண்ணூர் நெடுஞ்சாலையில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் புலம்பு அமைப்பதற்காக 2 கோடி 55 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் மழை நீரை வெளியேற்றுவது பழுதடைந்த சாலைகளை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி அனைத்து துறை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.





Recommended For You