PUBLIC NEWS TV-தமிழகத்தில் சிறுவர்கள் மீது வழக்கு , ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பு!.

PUBLIC NEWS TV-தமிழகத்தில் சிறுவர்கள் மீது வழக்கு , ஒவ்வொரு ஆண்டும் அதிகரிப்பு!.

PUBLISHED:26-Dec-2017

மதுரை:-

தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகள் அதிகரித்து வரும் சூழலில், நடப்பாண்டில் 3,235 சிறார்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும், கடந்த சில ஆண்டுகளாக இளம் சிறார்கள்,  குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது அதிகரித்துள்ளது. தேசிய குற்றப்பதிவு புள்ளிவிபர அறிக்கையின்படி, கடந்த 2015ல் தமிழகத்தில் 2,795 சிறார்கள்,  2016ல் 2,927, நடப்பாண்டில் (2017) இதுவரை 3,235 பேர் மீது குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஒவ்வொரு ஆண்டும் குற்ற  சம்பவங்களில் ஈடுபடும் சிறார்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் 32.5 சதவீதம் பேர் வெறும் எச்சரிக்கையோடு  விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மற்ற மாநிலங்களில் எச்சரிக்கப்பட்டு, விடுவிக்கப்படும் சிறார் குற்றவாளிகளின் எண்ணிக்கை 12 சதவீதமாக  உள்ளது.

 தமிழக சிறார் குற்றவாளிகளில் 16 சதவீதம் பேர், தகுதி அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டு, பெற்றோரின் பாதுகாப்பின் கீழ் விடப்படுகின்றனர்.  மேலும் 15 சதவீதம் பேர் சிறப்பு சீர்திருத்த மையங்களில் விடப்படுகின்றனர். ஆனால், இவர்கள் அனைவருமே இந்திய தண்டனை சட்டம் ஐபிசி  அல்லது சிறப்பு மற்றும் உள்ளூர் சட்டங்கள் எஸ்எல்எல் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள்தான். சில வழக்குகளில் சமூக பாதுகாப்புத்துறையின்  அலட்சியத்தால், சிறார் குற்றவாளிகள் தங்களுக்கான சலுகைகளை பயன்படுத்தி தண்டனை காலம் முடிவதற்கு முன்பே வெளியில் வந்து  விடுகின்றனர். இதனை வசதி படைத்த பெற்றோர் பயன்படுத்திக் கொள்கின்றனர். மேலும், தற்போதுள்ள சூழ்நிலையில் சிறார் சீர்திருத்த பள்ளிகளின்  நிலை மிகவும் மோசமாக உள்ளது. அங்கு அடைக்கப்படும் சிறார் குற்றவாளிகள் எந்த வகையிலும் சீர்திருத்தம் பெறுவதில்லை.

 தமிழகத்தில் உள்ள சீர்திருத்த மையங்கள் சிறைச்சாலைகளை போன்றே உள்ளதால், அங்கு அடைக்கப்படும் சிறுவர்கள் மீண்டும் அதே குற்றத்தை  செய்ய ண்டப்படுகின்றனர். இதனால் விடுதலையான பிறகு, அவர்கள் மிகப்பெரிய குற்றவாளியாகி விடுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘‘தமிழகத்தில் உள்ள பல சீர்திருத்த பள்ளிகள், சிறார் குற்றவாளிகள் எளிதில் அங்கிருந்து தப்பி செல்லும்  வகையிலேயே உள்ளது. சீர்திருத்த பள்ளிகளில் இருந்து விடுதலையானதும் அந்த சிறுவர்களின் நிலை எப்படி உள்ளது என எவரும்  கண்காணிப்பதில்லை. இதனால் வெளியில் வந்த பிறகு முன்பை விட கொடூரமான குற்றங்களிலேயே அவர்கள் ஈடுபடுகின்றனர்’’ என்றனர்.




Recommended For You