PUBLIC NEWS TV - காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு திரும்பிய வாலிபர் வெட்டிக்கொலை..!

PUBLIC NEWS TV - காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு திரும்பிய வாலிபர் வெட்டிக்கொலை..!

PUBLISHED:18-Jun-2019

மதுரை:-

தேதி : 18-6-2019

மதுரை கே.புதூர் காந்திபுரம் 6-வது தெருவைச் சேர்ந்தவர் கந்தசாமி, கட்டிட தொழிலாளி. இவரது மகன் ஆறுமுகம் (வயது22). செல்போன் கடை நடத்தி வருகிறார்.

இவர் மீது சில வழக்குகள் உள்ளன.

ஒரு வழக்கில் கைதாகி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த ஆறுமுகம் புதூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

இன்று காலை வீட்டில் இருந்து காவல் நிலையம் சென்ற ஆறுமுகம் அங்கு கையெழுத்து போட்டுவிட்டு புதூர் பஸ் நிலையம் வந்தார்.

அப்போது அங்கு 5 பேர் கொண்ட கும்பல் கையில் ஆயுதங்களுடன் வந்தது.

அந்த கும்பல் ஆறுமுகத்தை தாக்கும் நோக்கத்தில் வந்தது.

அவர்களை கண்டதும் ஆறுமுகம் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

ஆனால் மர்ம கும்பல் அவரை ஓட... ஓட... விரட்டி அரிவாளால் வெட்டியது.

பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் நிறைந்த பஸ் நிலைய பகுதியில் இந்த சம்பவம் அங்கு பதட்டத்தை ஏற்படுத்தியது.

பொதுமக்கள் அலறியடித்து ஓடினர்.

இதற்கிடையில் சரமாரியாக வெட்டப்பட்ட ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார்.

அதன் பிறகு கொலையாளிகள் அங்கு நின்ற வேனில் ஏறி தப்ப முயன்றனர்.

நான்கு பேர் வேனில் ஏறிவிட்ட நிலையில் ஒருவர் கால்தவறி கீழே விழுந்தார்.

அவரை அங்கு போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர்,  காவலர் மடக்கி பிடித்தனர்.

பின்னர் அந்த வாலிபர் புதூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

புதூர் ஆய்வாளர் முத்து ராஜ் விசாரணை நடத்தியதில் அவனது பெயர் பால முருகன் (28) என தெரிய வந்தது. மேலூர் அருகே உள்ள மங்களகுடியைச் சேர்ந்த அவர் எதற்காக கொலை செயலில் இறங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Recommended For You