தூத்துக்குடி:-
தேதி - 6-7-2019
"பெட்ரோலிய விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்துவோம்",:
தூத்துக்குடியில் முதல்வர் பழனிச்சாமி பேட்டி
தென்காசியில் கட்சி விழாவில் கலந்து கொள்ள தூத்துக்குடிக்கு இன்று வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
"பெட்ரோலிய விலையை குறைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துவோம்" எனக் கூறினார்.
அ.ம.மு.க . மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளான இசக்கி சுப்பையா, கல்லூர் வேலாயுதம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இன்று மாலை இணைகின்றனர்,
இதற்கான விழா இன்று தென்காசியில் பிரமாண்டமாக நடைபெறுகிறது
இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தனர்,
அவர்களை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர்களான அமைச்சர் கடம்பூர் ராஜு , பால்வளத் துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் இராஜலெட்சுமி,
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி தளவாய் சுந்தரம், மற்றும் முன்னாள் அமைச்சர் S.P. சண்முகநாதன், அதிமுக அமைப்புச் செயலாளர்,
முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன், ஆகியோர் தலைமையில் அதிமுகவினர் அவர்களை வரவேற்றனர்,
தூத்துக்குடிக்கு இன்று வருகை தந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு, வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி.
"பெட்ரோலிய விலையை குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவோம், கோதாவரி காவிரி இணைப்பிற்கான விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது, அதற்கான பணிகள் துவக்கப்பட்டு உள்ளது
சேலம் உருக்காலை பிரச்சினை பொது பிரச்சினை இதில் ஆயிரக்கணக்கானோர் பணி புரிந்து வருகின்றனர், பிற மாநிலங்களில் அனைத்துக் கட்சியினரும் பொது பிரச்சினைகளில் இணைந்து செயல்படுவது போல் தனியாருக்கு ஒப்படைக்க்கூடாது.
என்ற அடிப்படையில் மனமாச்சர்யங்கள் இல்லாமல் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்துள்ளோம்
பிரிந்து சென்றவர்கள் ஒன்றாக இணைந்து கழகத்தை வலுப்படுத்தி உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அடிப்படையில் விடுத்த அழைப்பை ஏற்று தாய்க்கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
தாய்க்கழகத்தில் இணைய வேண்டும் என்பதை தொடர்ந்து கழக ஒருங்கிணைப்பாளர்தெரிவித்துள்ளார் அதனடிப்படையில் தாய்க்கழகத்தில் அனைவரும் இணைய வேண்டும்
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.
வரவேற்பு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மற்றும் ஏராளமான கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்
முன்னதாக அவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி, நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், ஆகியோர் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.