சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில்

PUBLISHED:11-Jan-2025

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு கால்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கம் சார்பில் தமிழக முழுவதும் சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுக்கவும், மேய்ச்சல் நிலம் தேவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மாபெரும் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது தமிழ்நாடு காவல்நடை விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் சாந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் 500 கும் மேற்பட்ட கால்நடை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வண்ணமாக பல்வேறு கோஷங்களை எழுப்பி தங்கள் கோரிக்கை முன்வைத்தனர்.

தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கால்நடை விவசாயிகள்  முன்னேற்ற சங்க மாநில தலைவர் தங்க சாந்தகுமார்  பேசுகையில்,

தமிழ்நாடு அரசின் கவனத்தை ஈர்க்கும்  வகையில் கால்நடை விவசாயிகள் அனைவரும் ஒன்று திரண்டு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நடத்தி வருகிறோம்.

சென்னை பெருநகர மாநகராட்சியில் இருக்கின்ற கால்நடை விவசாயிகளை கணக்கெடுத்து நவீன மாட்டு தொழுவம் அமைப்பதற்கான உறுதியை  மாநகர மேயர் கொடுத்திருப்பதாகவும்,இது மட்டுமல்லாமல் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்தார். திருவேற்காட்டில் ஒரு பொது நல வழக்கு பதியப்பட்டு இருப்பதாகவும், மாடுகள் திருவேற்காட்டில்  உள்ள சாலைகள்  மட்டும் அல்ல  தமிழகம் முழுவதும் சுற்றி திரிவாதாகவும்,நீதி அரசர் கருத்து தெரிவித்தார்.

மேலும் மாட்டுக்கு அபராதம் விதிக்க கூடாது  என்றும் மாடு உரிமையாளர் மீது தான் அபராதம் போட வேண்டும் என்று கூறினார். எந்த ஒரு கால்நடை விவசாயிகளும் சாலைகளில் மாடு சுற்றி திரிவதை விரும்புவதில்லை, எனவே சாலையில் மாடுகள் சுற்றி திரிவதை தடுக்க தமிழ்நாடு அரசு மேய்ச்சல் நிலம் மற்றும் நவீன மாட்டு தொழுவம்   அமைத்து தர  வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி நவீன  மாட்டுத் தொழுவாம் கொடுத்து இருக்கின்றனர். கூடிய விரைவில் சென்னை  மாநகராட்சியில் மாட்டுத் தொல்லை என்பது இனி இருக்காது. தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாட்டுத் தொழுவம் கொண்டுவர வேண்டும்.

மேய்ச்சல் நிலம் என்பது எங்களுடைய அடிப்படை உரிமை  என்றும் மேய்ச்சல் நிலத்தை மீட்டு தர வேண்டும் என்றும் மேய்ச்சல் நிலத்தில்  கால்நடைகளை வாழ வைக்க வேண்டும் கோரிக்கை வைத்தார்.

தமிழ்நாடு அரசு எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றி மேய்ச்சல் நிலமும் நவீன மாட்டு தொழுவவும் அமைத்து விவசாயிகளினுடைய வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

சென்னையில் மேய்ச்சல் நிலம் ஏக்கர் கணக்கில்  இருப்பதாகவும்,காலியாக இருக்கின்ற மேய்ச்சல் நிலத்தை அனைத்தையும் கணக்கெடுத்து மாடுக்கு தேவையான இடங்களை  வழங்க வேண்டும்.

அனைத்து மக்களிடமும் சென்று விசாரிக்கும் போது மாடு சாலையில் செல்லக்கூடிய அனைவரையும் தாக்கக் கூடிய நிலைமை இருப்பதாகவும், இதை தடுப்பது  எங்களுடைய நோக்கம்.நிறை குறைகளை கேட்டு அறிந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

முதலமைச்சர்,அமைச்சர் அவர்களிடம் இது  தொடர்பாக மனு அளித்ததாகவும் இது தொடர்பாக 4 வருடங்கள் போராடிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.இதுவரை இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்தார்.

இயற்கை வளங்களை அழிப்பதனால் விலங்குகள் மற்றும் மனிதர்கள் பெருமளவில் பாதிப்பு அடைந்துள்ளனர் என்று  வருத்தம் தெரிவித்துள்ளார்.

சென்னை போன்ற மாநகராட்சிகளில் மேய்ச்சல் நிலங்கள் இருக்கக் கூடாது என எந்த சட்டமும் கூறவில்லை.
கால்நடை இருக்க கூடிய இடத்தில் மேய்ச்சல் நிலம் இருக்க வேண்டும் என்று சட்டம் தெரிவிப்பதாக கூறினார்.இன்றைக்கு ஒரு வருடமான பாலையும் கொடுக்கிறார்கள் அதை சாப்பிட்டால் நம்முடைய உடம்பு கெட்டுவிடும் என்றார்.




Recommended For You