பள்ளி அருகே ஆசிரியர் குத்திக் கொலை
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமைய சிறப்பு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த வடிவேல்முருகன் வயது 40.
இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது, கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந் நிலையில் வடிவேல் முருகன் பிரியா (28) என்ற பெண்ணை 2-வது திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இன்று இது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் இவருடைய முன்னாள் மனைவியின் தம்பி அற்புத செல்வம் என்பவர் இவரை கத்தியால் சரமாரியாக குத்திக் கொன்றார்.
தகவல் அறிந்து, புதூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகலட்சுமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, வடிவேல் முருகன் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அற்புத செல்வம் என்ற ஆஸ்டினை போலீஸார் கைது செய்தனர்