கடலூர் :-
தேதி - 6-7-2019
கடலூர் முதுநகர் அடுத்த மனகுப்பம்த்தில் உள்ள விளைநிலத்தில் 35 வயது மதிக்கத்தக்க
அடையாளம் தெரியாத ஒரு நபர் வெட்டிக்படுகொலை - இறந்தவர் யார் என்று முதுநகர் காவல்துறையினர் விசாரணை.
கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பம் அடுத்த மனகுப்பத்தில் உள்ள விளை நிலத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை வயல்வெளிக்கு சென்ற கிராம மக்கள் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு கடலூர் முதுநகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதுநகர் காவல்துறையினர் படுகொலை செய்யப்பட்ட நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இக்கொலைச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்யப்பட்டவர் யார் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்று முதுநகர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்திற்கு கடலூர் துணை காவல் கண்காணிப்பாளர் சாந்தி நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார்.