வாக்ஸ் குழுமத்தின் சார்பில் பள்ளி மாணவர்கள் 500 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

PUBLISHED:12-Jun-2023

வாக்ஸ் குழுமத்தின் நிறுவனர் ஞானசுந்தரம் அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 7 ஆம் தேதி நிறுவனர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இவரது மூத்த மகன் இராவணன் ஞானசுந்தரம் வாக்ஸ் அறக்கட்டளையை துவக்கி, அதன் மூலம் நிறுவனர் ஞானசுந்தரம் அவர்களின் நினைவு போற்றும் வகையில், கிராமப்புறங்களில் உள்ள தகுதியான மாணவர்களுக்கும் தரமான கல்வி வழங்கும் வகையில், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குழந்தைகளுக்கும், மாற்றுத்திறனாளிகளின் குழந்தைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆண்டுதோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது .

இதுவரை 10,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் இந்த அறக்கட்டளை மூலம் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுபோல் இந்த ஆண்டும் ஜூன் 7ஆம் தேதி வாக்ஸ்  குடும்பத்தின் 16வது நிறுவனர் ஞானசுந்தரம் அவர்களின் நினைவு தினத்தையொட்டி சென்னை கோவிலம்பாக்கத்தில்  சுமார் 500 மேற்பட்டோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டது.

ஏழை, எளிய மாணவர் மாற்றுத்திறனாளி பெற்றோர்களின் குழந்தைகளுக்கும் உதவித்தொகை மற்றும் பெண்களுக்கு இலவச சேலை மற்றும் அசைவ உணவு விருந்து வழங்கப்பட்டது .

மேலும் தமிழக மட்டுமல்லாது பாண்டிச்சேரியிலும் இதே நாளில் ஆண்டுதோறும் இந்நிகழ்ச்சி நடைப்பெறுகிறது.

சென்னையில் வாக்ஸ் விருட்சம் , அறக்கட்டளை மூலமாக நடைபெற்றது.
 இதன் தொடர்ச்சியாக வாக்ஸ் சிப்பி பாண்டிச்சேரி ,வாக்ஸ் வனம் கொடைக்கானல் , திண்டிவனத்தில் வாக்ஸ்  பண்ணை ,
வாக்ஸ் பட்டினம் ஆகிய கிளைகளிலும் வாக்ஸ் ஆக்ரோ திருவண்ணாமலை, வாக்ஸ் விடுதி ஸ்ரீபெரும்புதூர் ஆகிய இடங்களில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் வாக்ஸ் குழுமத்தின் இயக்குனர் இராவணன் தலைமையில் அவரது மனைவி கவிதா இராவணன், மகன்
இந்திரஜித் , சாய்ராம் குழுமம் சாய் பிரகாஷ் லியோ முத்து , சன் டிவி புகழ் வீரபாண்டியன் , கோவிலம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மணிமாறன் , முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரங்கநாதன் ,ஜெகநாதன் மற்றும் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் உட்பட பல கலந்து கொண்டனர்.




Recommended For You