சென்னை வடகிழக்கு மாவட்ட திமுக வர்த்தகர் அணியில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை வடகிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளர் லயன் வீ.தியாகராஜன் தலைமையில் மாநில வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கத்தை, நிர்வாகிகள் ஒன்றிணைந்து நேரில் சந்தித்து கலைஞரின் பேனா சிலை வழங்கி வாழ்த்து பெற்றனர்.
இதில் சென்னை வடகிழக்கு மாவட்ட வர்த்தகர் அணி துணை அமைப்பாளர்கள் லயன் வீ.சுரேஷ்குமார் , மாத்தூர் பி.ஜெயராஜ் மற்றும் நிர்வாகிகள் ஆர்.ராஜசேகர் , எம்.ராஜா , எஸ்.மகேஷ்குமார் , ஆர்.வினோத்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.